Notification texts go here Contact Us Buy Now!

Karur History in Tamil - கரூரின் வரலாறு

கரூர் மாவட்டத்தின் வரலாறு - கரூர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்!

புராணகால வரலாறு


கரூர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட, மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்து மத நம்பிக்கைப்படி, இறைவன் பிரம்மா தன் படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கியதாக கூறப்படுகிறது. பழங்கால நில ஆய்வுகள், கரூர் ஒரு தங்க ஆபரணத் தயாரிப்பு மையமாக இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.

"கருவூர்" என்று பண்டையக் காலத்தில் அழைக்கப்பட்ட கரூருக்கு (Old Name of Karur), வஞ்சி மாநகரம் என்றும், கைத்தறி நெசவில் சிறந்து விளங்குவதால் "தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகர்" என்றும் அழைக்கப்படுகிறது.


இந்துப் புராணங்களில் கரூர் பகுதி 'புனிதப் பசுவின் ஸ்தலம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது 'Place of the Sacred Cow' எனப்படுகிறது.

பெயர்க் காரணம்

கருவூர் என்ற அழைக்கப்பட்ட நகரம் பிற்காலத்தில் மருவி கரூர் என பெயர் பெற்றுள்ளது. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரமாக கரூர் விளங்கியள்ளது. 

மாவட்டமாக உருவாக்கம் - When Did Karur Become A District?

கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கரூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.1995 செப்டம்பர் 30-ல் திருச்சி மாவட்டம் திருச்சி முத்தரையர், பெரம்பலூர் திருவள்ளுவர், கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு திருச்சியில் இருந்து 1996ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி கரூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
(Karur Day - July 25, 1996) வடக்கே நாமக்கல் மாவட்டமும் கிழக்கே திருச்சி மாவட்டமும் தெற்கே திண்டுக்கல் மாவட்டமும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.


நிர்வாக அலகுகள்

கோட்டங்கள் : 2 - கரூர் மற்றும் குளித்தலை
வட்டங்கள் : 7 - கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர்
வருவாய் கிராமங்கள்- 203

அமைவிடம்

கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியிலும், சென்னையிலிருந்து 410 கி.மீ தெற்கிலும், 2904 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் அமராவதி மற்றும் காவேரி ஆகிய ஆறுகளை இயற்கை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கனிமங்கள் மற்றும் சுரங்கம்

கரூர், கனிம வளம் நிறைந்த மாவட்டம். கிராணைட் கற்கள் தோகமலை, கே.பிச்சம்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. மேற்கூறிய முக்கிய கனிமம் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.

வழிபாட்டுத்தலங்கள்

கரூர் நகரில் சிவாலயங்களின் 7 புனித ஸ்தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாந்தோண்றி மலையில் 'தெற்கு திருப்பதி' என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ராமன சுவாமி திருக்கோவில் மற்றும் வெண்ணமலை பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில், கரூர் நகரின் மையப்பகுதியில் ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது. காவேரி கரையோரத்தில் வேலாயுதம்பாளையத்தில் சிறு குன்றின் மீது பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் நெரூர் சதாசிவம் திருக்கோயிலும் பிரசித்தமான கோவிலாகும்.


தொழில்கள்

கரூர் நகரம் உயர் தர கைத்தறி தொழிலுக்கு புகழ் பெற்றுள்ளது மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில், ஆடை உற்பத்தி, கொசு வலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதிலுலும் முதல் இடம் வகிக்கிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய தொழிற்சாலைகள் பற்றிய விவரங்கள்:

1. தமிழ்நாடு செய்தி மற்றும் காகித உற்பத்தி நிறுவனம் புகளூரில் அமைந்துள்ளது.
2. மேலும் தமிழ்நாடு செய்தி மற்றும் காகித உற்பத்தி நிறுவனம் காகிதப்புரத்தில் சிமெண்ட் உற்பதியகத்தையும் நிறுவியுள்ளது.
3. செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை புலியூரில் அமைந்துள்ளது.
4. சேரன் சிமெண்ட் கரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.


இந்த மாவட்டமாக விளங்குகிறது இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிரானைட் கற்கள் காணப்படும் தவிர செம்மண் செங்கல் போன்ற கனிமங்களும் காணப்படுகின்றன கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்ற ஆடை உற்பத்தி கொசுவலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதிலும் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது இங்கு தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி பழங்காலத்திலிருந்து நடைபெற்று வரும் மாவட்ட தொழிற் சாலைகளும் பார்க்கும்போது தமிழ்நாடு செய்தி மற்றும் காகித உற்பத்தி நிறுவனம் புகழ் உள்ள அமஞ்சி இருக்கு மக்கள் பயன்படுத்தும் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவிலேயே முதன்முதலாக கரூரில் உள்ள தான் தொடங்கப்பட்டது கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் முறையில் உலகிலேயே முன்னணியாக இருக்கிறது இந்த கரூர் மாவட்ட தொழிற்சாலை இதே டிஎன்பிஎல் நிறுவனத்தோட சிமெண்ட் தொழிற்சாலை காகிதத்தில் நிறுவப்பட்டிருக்கும் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை பொருளிலும் சேரன் தொழிற்சாலைகளிலும் அமைந்திருக்கு கரூர் மாவட்டம் பேருந்து கட்டுமானத் தொழிலில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இந்தியாவின் அதிக அளவு பேருந்து உற்பத்தி கரூர் மாவட்டத்தில் தான் நடைபெறுகிறது இம்மாவட்டத்தின் 867.

[00:01:59.900] 
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கருடன் நினைக்கக்கூடிய சாலையாக விளங்குது கண்யகுமரி டோ கஷ்மிர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 44 கரூர் மாவட்டத்தின் வழியாக செல்வது கரூர் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் தமிழ்நாட்டின் முக்கியமான ரயில்வே ஜங்ஷன் ஆக விளங்குது இதை இந்திய ரயில்வே நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை ஈரோடு வழியாக திருச்சி திண்டுக்கல்லுக்கு போகவும் திருச்சி திண்டுக்கல் இருந்து அதைப் போக்கவும் கரூர் முக்கிய சந்திப்பாக அமைச்சருக்கு கரூர் வழியாக ஒரு நாளைக்கு 45 க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து போகிறது இவ்வளவு சிறப்பு வாய்ந்த கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கியமான கோயில்கள் மற்றும் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் பற்றி இப்போது படம் வீடியோஸ் டிக் படம் கடைசி வரை பாருங்கள் vaanga.pdf உள்ள போகலாம் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

[00:02:59.900] 
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவ தளமாகவும் கொங்கு நாட்டின் ஏழு சிவ தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது இக்கோயில் அமராவதி ஆற்றங்கரையில் கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மாயனூர் கதவணை இந்த தடுப்பணை கரூரிலிருந்து இருபத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் தமிழகத்தின் மையப் பகுதியாக அமைந்து இருப்பது சங்க கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பின் எல்லையாக மாயனூர் விலங்கிற்கு மாயனூர் அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயில் இது மாயனூர் டேம் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு புகழ்பெற்ற புனிதத் தலமாக விளங்குகிறது இந்த கோயில் கரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அம்மா பூங்கா திருக்கம்புளியூர் இந்த பார்க்கும் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு பக்கத்துல காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த பார் ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்குகிறது திருமுக்கூடலூர் காவிரி அமராவதி மணிமுத்து ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமே திருமுக்கூடலூர்.

[00:03:59.800] 
இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் இது கரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் இது கரூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் தான் தோன்றி மறையும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்தக் கோயில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்பட்டது ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம் நேரு காஞ்சிபுரம் மடத்தின் குருக்களில் ஒருவரான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இங்கு ஜீவ சமாதி அடைந்திருக்கிறார் இந்த கோயில் கரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இது கரூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக விளங்குவது பொன்னணியாறு அணை இந்த டேங்கர் ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி மாவட்ட எல்லையில் இடையப்பட்டி என்ற கிராமத்தில் கட்டப்பட்டு இருக்கு இந்த டேம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவது அய்யர்மலை இதே கரூரிலிருந்து நாற்பத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குளித்தலை அருகே அமைந்திருக்கக் கூடிய ஒரு மலையாகும் இம்மலை ஏறக்குறைய 1600 அடி உயரம் கொண்டது இந்த மலை உச்சியில்.

[00:04:59.800] 
எனக்கு ஈஸ்வரர் கோயில் அமைச்சருக்கு இந்த கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும் விளங்குது கரூர் மாவட்டத்தின் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இந்த கொள்கிறது அரசு அருங்காட்சியகம் கரூர் கரூர் நகர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும் இங்கு சங்ககால சேரர் சோழர் பாண்டியர் கள் பயன்படுத்திய காசுகள் மற்றும் பல்வேறு அரசர்கள் பயன்படுத்திய காசுகள் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை இங்கு நம்ம பார்க்கலாம் கரூர் மாரியம்மன் கோயில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் கரூர் நகர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு புகழ்பெற்ற அம்மன் கோயிலாகும் இங்கு மே மாதம் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் அன்னை தெரசா இல்லம் இது கரூர் நகர் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு புகழ்பெற்ற தேவாலயமாக விளங்குது வெண்ணைமலை முருகன் கோயில் இந்த கோயில் கரூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமஞ்சி இருக்கு இந்த கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் முருகன் கோயில் இந்த கோயில் கரூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் வேலாயுதம்பாளையம் அருகே சிறிய மலையின் மேல் அமைந்தது.

[00:05:59.800] 
இங்கு அமைந்திருக்கக் கூடிய சமணர் படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது ஸ்ரீ முத்து சுவாமி திருக்கோயில் இந்த கோயில் கரூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூரில் அமஞ்சி இருக்கு அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில் இந்தக் கோயில் கரூரிலிருந்து நாற்பத்தி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குளித்தலையில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் ஒவ்வொரு வருஷமும் தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருவது ரங்கமலை இந்த மலை கரூர் டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூரிலிருந்து நாற்பத்தி நான்கு கிலோமீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் கரடுமுரடான பாதையில் கட்டிங் போக விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக விளங்குவது



தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.

கரூர் நகரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரூரில் 1973-74, 1977, 1979, 1996 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் கரூரின் தொன்மையான வரலாற்றைச் சான்றுரைக்கின்றன.


சேரர் அகழ் வைப்பகம்

இவற்றில் கரூர் நகரின் தொன்மையை விளக்கும் பல்வேறு சான்றுகள் கிடைத்தன. இவற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கரூரில் சேரர் அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்பட்டு, கரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், நாணயங்கள், தொன்மையின் ஆதாரங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.

இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களை யாரும் தோண்டிவிடக் கூடாது என அறிவிக்கும் விதமாகவும், அவர்களின் நினைவாகவும் பெருங்கற்காலத்தில் உடலைப் புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கற்கள் அடுக்கி வைக்கும் வழக்கம், கல்வட்டத்திற்குள் கற்களை அடுக்கி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவை கல்வட்டம், கல்குவை என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற கல்வட்டம், கல்குவை கரூர் மாவட்டத்தில் புகழூர், காருடையாம்பாளையம், மண்மங்கலம், மலைக்கோயிலூர், மூக்கணாங்குறிச்சி, நத்தமேடு, புன்னம், வேட்டமங்கலம், அருமைக்காரன்பட்டி, கேதம்பட்டி, சணப்பிரட்டி, உப்புப்பாளையம், சின்ன ஆண்டாங்கோயில், நெடுங்கூர், நாகம்பள்ளி, ஒத்தம்பட்டி, முன்னூர், பள்ளப்பாளையம், பவித்திரம், பரமத்தி, ராமகவுண்டன்புதூர், கொத்தம்பாளையம், கீழ்கேத்தம்பட்டி, கோவிலூர், கரைபாளையம், வடுகனூர், வாழ்நாயக்கன்பட்டி, காளிப்பாளையம், வெஞ்மாங்கூடலூர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நெடுங்கூரில் காணப்பட்ட ஈமச்சின்னமான கல்வட்டம் 2006- 2007 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இத்தகைய தொன்மையான வரலாறு கொண்ட கரூரில் போக்குவரத்து வளர்ச்சி, மக்களின் அறியாமை காணமாக பெருங்கற்காலச் சான்றுகளாக விளங்கும் கல்வட்டம், கல்குவை ஆகியவை பல இடங்களில் மாயமாகி விட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை கரூர் சேரர் அகழ்வைப்பகக் காப்பாட்சியர் சி.செல்வக்குமார் கூறுகையில், “கரூர் அருகேயுள்ள மண்மங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 40-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்பட்ட நிலையில் 4 வழிச்சாலை விரிவாக்கத்தாலும், கல்வட்டத்தில் உள்ள கற்கள் கிரைண்டர் குழவிக்காக எடுக்கப்பட்டதாலும் பல இடங்களில் கல்வட்டங்கள், கல்குவை மாயமாகிவிட்டன” என்றார்.


FAQ:
  1. Who Ruled Karur?

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.