Notification texts go here Contact Us Buy Now!

விக்கல் எதனால் வருகிறது? விக்கலை நிறுத்துவது எப்படி?

சாதாரணமாக விக்கல் வந்தால் யாரோ நம்மை நினைத்துக் கொள்கிறார்கள் என சொல்வார்கள்! 

சிலர் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் விக்கல் வருகிறது என சொல்வார்கள். ஆனால் உண்மையில் உதரவிதானத் தசை (Diaphragm muscle) திடிரென சுருங்குவதால், ஒருவித தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால் குரல் நாண்கள் மூடி விட்டுவிட்டு ஒருவித ஒலியை உண்டாக்குகிறது. இதுதான் விக்கல்!

விக்கல் எப்போதெல்லாம் வரும்?

1. வேகமாக சாப்பிடுதல்
2. அளவுக்கதிகமாக சாப்பிடுதல்
3. நரம்புகளை எரிச்சலூட்டும், உதரவிதானத்தைக் கட்டுப்படுத்தும் நோய்கள்
4. அடைப்பு
5. ப்ரெய்ன் ட்யூமர்
6. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல்

சிலருக்கு விடாமல் விக்கல் வந்துகொண்டே இருக்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்காது. சில எளிய செயல்கள் விக்கலிலிருந்து விடுதலைக் கொடுக்கும். நாக்கை நன்றாக வெளியே நீட்டுங்கள். அப்படியே சில நொடிகள் வைக்கவேண்டும். பாடகர்கள் கூட இந்த எளிய பயிற்சியை குரல்வளத்தை மேம்படுத்த சய்வார்கள். இதனால் மூச்சுவிடுதல் எளிதாகும்.

விக்கல் நிற்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

பெரும்பாலும் எல்லாராலும் சொல்லப்படுகிற டிப்ஸ் இது. ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே விழுங்குவதன் மூலம் விக்கல் நின்றுவிடும் ஆனால் இது உணவுக் குழாயில் சற்று எரிச்சலை ஏற்படுத்தும், ஒரு ஸ்பூன் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் விக்கல் அப்படியே நிற்கும்.

தேன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் அருமருந்து என்பது நாம் நன்கு அறிந்ததே. தேனை சிறிது சுடுதண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி நாக்கின் அடியில் சிறிது நேரம் வைத்து விழுங்க விக்கல் நிற்கும்.

விக்கலை நிறுத்த மற்றொரு சிறந்த முறை சிறிது எலுமிச்சம் பழத்தை எடுத்து அதைவாயில் வைத்து நன்றாக உறிஞ்சி சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும்.

விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் விரலை வைத்து குறைந்தது 30 நொடிகள் அடைத்து வைக்கவும் அடைத்துக் கொண்டிருக்கும் போதே காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக அழுத்தவும். இது வேகஸ் நரம்புகளுக்கு கட்டளை கொடுத்து ரிலாக்ஸ் ஆக்கும். இதனால் விக்கல் நின்றுவிடும்.

தண்ணீர் குடித்தால் விக்கல் நின்றுவிடும் என்பது அனைவருக்கும் தெரியும் தொடர் விக்கல் வரும் நேரத்தில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு காதுகளையும் அடைத்துக் கொண்டு ஏற்கனவே சொன்னதுபோல் காதுகளுக்கு பின்புறம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் சீக்கிரத்தில் விக்கல் நிற்கும்.

நன்றாக அமர்ந்து கொண்டு முழங்காலை மடக்கி மார்புவரை கொண்டு சென்று கட்டிப்பிடித்து அப்படியே 2 நிமிடம் இருக்கவேண்டும். முழங்கால் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்கும். இதனால் விக்கல் நிற்கும் திடீரென ஷாக் கொடுத்தால் சிலருக்கு விக்கல் நின்றுவிடும்.

ஒரு காகிதப் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அதற்குள் சுவாசிக்கவும். இது ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து, சுவாசக்குழாயில் அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும் படி செய்யும். இதனால் விக்கல் நின்று விடும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனாலும் விக்கல் உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் இதுதான் தீர்வு என யாராலும் கணிக்க முடிவதில்லை.

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

1 comment

  1. Super 👌
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.