ஒரு காலை, மற்றொரு காலால் தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது. இதனால் பொருளாதார வீழ்ச்சியும், சுகாதாரக் கேடும் ஏற்படும் என்கிறது தர்மசாஸ்திரம்.
பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள அழுக்குகள் மற்றொரு காலின் மேல்பாகத்தில் சேர்ந்து விடும். இது, சுகாதாரத்தைக் கெடுக்கும்.
நம் உடலை, நம் காலால் மிதிக்கக் கூடாது, காலின் மேல் பாகத்தை அடுத்த காலின் பாதத்தால் தேய்ப்பது அபசாரம்.
நடந்து நடந்து அசுத்தத்துடன் இணைந்த காலை, மற்றொரு காலில் வைப்பது தவறு. கைகளைக் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும்.
உடலின் வலுவைத் தாங்கிக் கொண்டு நடப்பது கால்கள்தான். அவற்றின் சுகாதாரத்தில் தனிக் கவனம் தேவை. எனவே, தவறான நடைமுறையைத் தவிர்ப்பதே நல்லது.