பெண்களின் அழகைகீ கெடுக்கும் முக்கியமான விஷயம் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரி செய்யும் எளிய வீட்டு மருத்துவ முறைகளைப் பற்றி பார்ப்போம்!
தக்காளி ஜூஸை ஒரு ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மற்றும் மாலை என்று இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.
துருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிவர கரு வளையம் போய் விடும்.
டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கருவளையம் சரியாகும்.
பாதாம் எண்ணெயைக் கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.
தினமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்துவர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும்.
வெள்ளிரிக்காயை அரை மணி நேரம் பிரிட்ஜில் வௌத்து பின் எடுத்து, அதை 10 நிமிடம் கருவளையத்தில் வைத்து வர முகம் புத்துணர்ச்சியடையும்.
புதினா இலையை நீர் சேர்த்து விழுதாக அரைத்து அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும்.
ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைந்து முகத்தில் ஒரு 15 நிமிடம் ஊற வைக்க முகப்பொழிவு கிடைக்கும். இவ்வாறு ஒரு மாதம் இரவு செய்ய வேண்டும்.