Notification texts go here Contact Us Buy Now!

திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது எதற்கு? அதன் அறிவியல் பின்னணி என்ன?

நம்மூர் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றால் திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி சுமந்து வலம் வருவதை பார்த்திருப்போம்.

பெரும்பாலும், நவதானிய விதைகளை கொண்டு தான் முளைப்பாரி அமைப்பார்கள்.

கன்னிப்பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி தூக்கினால் நல்ல கணவன் கிடைக்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும், அம்மன் அருளால் கொடிய நோய்கள் நீங்கும் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஊர்புற வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

$ads={1}

வளர்ந்து வரும் முளைக்கு தண்ணீர் தெளித்தல் முதற்கொண்டு பல சடங்கு சம்பிரதாயங்களோடு நடக்கும். கணவனை இழந்த பெண்கள் முளைக்கு தண்ணீர் இடக்கூடாது போன்ற நம்பிக்கைகளும் இதில் அடங்கும்.

இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் முளைப்பாரி எடுக்கும் சடங்கிற்கு உண்மையான காரணமே வேறு.

நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

25 Years UPSC IAS/ IPS Prelims Topic-wise Solved Papers 1 & 2 (1995-2019)
  • விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக விளை நிலத்தில் விதைக்காமல் தனியாக வீட்டிலேயே ஒரு கூடையில் மட்கிய குப்பைகளோடு விதைகளையிட்டு இளம்வெயில் படும்படி கூடை அமைப்பார்கள்.
  • பத்து நாட்கள் தண்ணீர் தெளித்து விதையின் வளர்ச்சியை பார்த்தனர்.
  • இவ்வாறு முன்கூட்டியே விதைகளின் முளைப்புத்திறன் , வளர்ச்சித்திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து பிறகு நிலத்தில் விதைக்கும் வழக்கம் கொண்டார்கள்.
  • அதனால், ஏக்கர் கணக்கில் விதைத்து நஷ்டமடையாமல் காத்துக்கொள்ள முடிந்தது.

இதுவே பின்னாட்களில்,

  • திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள்.
  • பின்னர் ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளை வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள்.
  • அப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டின் மகசூலை தோராயமாக கணித்தார்கள்.

இப்படி ஒரு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒரு சடங்கில் இன்று பல மூட நம்பிக்கைகளும் கலந்துவிட்டது

நன்றி : கோரா தமிழ்

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.