பலாப்பழ ஜாம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
1. பலாப்பழம் - 45 சுளைகள்
2. தண்ணீர் - தேவையான அளவு,
3. சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து, பாகு பதத்திற்கு வரும்போது இறக்கிவிடவும். ஆறியதும் அதில் பலாப்பழ துண்டுகளை சேர்த்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 15 நாட்கள் நன்கு ஊற வைக்கவும். ஊறியதும் அதிகப்படியான பாகுவை வடிகட்டியிட்டு, ஜாம் போன்று பயன்படுத்தலாம். பிரட்டுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.