தேவையான பொருட்கள்
1. ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு
2. கடலை மாவு - 1 கப்
3. பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்
4. பொடியாக நறுக்கிய முந்திரி (விரும்பினால்) - 1 டேபிள்ஸ்பூன்
5. உப்பு - சுவைக்கேற்ப
6. சீரகம் - அரை டீஸ்பூன்
7. எண்ணெய் - தேவையான அளவு
கீரை பக்கோடா செய்வது எப்படி?
கீரையைப் பொடியாக நறுக்கி, அலசி, ஒரு துணியில் பரவினாற் போல போட்டு காயவிடுங்கள். மாவுடன், கீரை, உப்பு, சீரகம் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். மாவில் தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டி அல்லது கிள்ளிப் போட்டு எடுங்கள், சத்து மிக்க, மாலைநேர டிபன் இது.