பானகம் என்றதும் இது அம்மன் கோவில் திருவிழாக்களில் தருவதாயிற்றே... என்று சொல்லக்கூடும்.
உண்மைதான். கோயில் திருவிழாக்களில் தான் நாம் இந்த பானத்தை சாப்பிடுகிறோம்.
கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏப்ரல், மே மாதங்களில் தான் நடைபெறும். இந்த மாதங்கள்தான் வெயில் சுட்டெரிக்கும் காலங்களாகும். அதனால்தான் அந்த காலங்களில் ஆன்மிகத்தோடு, உடல் ஆரோக்கியத்தையும் இணைத்து வைத்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இது புரியாமல் நாம் எதை, எதையோ சாப்பிட்டு, உடம்பைகெடுத்து கொண்டு இருக்கிறோம். சரி பானகத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை பார்ப்போம்.
மண்டை வெல்லம், ஏலக்காய்தூள்,சுக்குத்தூள், எலுமிச்சைச்சாறு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தை நச்சுப் போட்டு நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பிறகு வெல்லத் தண்ணீரில் ஏலக்காய்தூள், சுக்குத்தூள், எலுமிச்சைச்சாறு கலந்து பருக தரவும், ஒரு சிலர் புனி சேர்ப்பதுண்டு, இந்த பானத்தை சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு குறைவதுடன், சிறுநீரக கல் பிரச்சினை தீரும்.