1. துவரம்பருப்பு - ஒரு கப்
2. கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
3. பச்சை மிளகாய் - இரண்டு
4. சீரகம் - அரை டீஸ்பூன்
5. இஞ்சி - சிறிய துண்டு
6. மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
7. பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
8. பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
9. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
10. எலுமிச்சைப்பழம் - ஒன்று
11. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
12. உப்பு - தேவையான அளவு.
டோக்லா தயாரிக்க தேவையான பொருட்கள்
1. கோதுமை மாவு - ஒரு கப்
2. மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
3. ஓமம் - ஒரு டீஸ்பூன்
4. எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
5. உப்பு - தேவையான அளவு.
தால் டோக்லா செய்முறை:
துவரம்பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அகலமான தட்டில் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், ஓமம், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இவற்றை சிறு உருண்டைகளாக்கி வட்ட வட்டமாகத் தட்டிக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த பருப்பைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து செய்துவைத்த டோக்லாக்களைச் சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
கடைசியாகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.