1. ஜவ்வரிசி விழுது - 2 கப் (ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும்),
2. பனங்கிழங்கு - 4 கப்
3. சர்க்கரை - 3 கப்,
4. ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
5. முந்திரி, பாதாம் உலர்திராட்சை, நெய் - தேவையான அளவு
தேவையான உபகரணங்கள்
பனங்கிழங்கு அல்வா செய்முறை: பனங்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, கடாயில் சில டீஸ்பூன் நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஜவ்வரிசி விழுது சேர்த்துக் கலந்து சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். தேவையான நெய் ஊற்றி மேலும் கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் உலர்திராட்சை சேர்த்து இறக்கினால் பனங்கிழங்கு அல்வா தயார்! சூடாக இறக்கி பரிமாறவும்!