1. மைதா மாவு-2 கப்
2. சர்க்கரை-3 கப்
3. கேரட் துருவல்-1 கப்
4. டால்டா-முக்கால் கப்
5. சமையல் சோடா-கால் ஸ்பூன்
6. பைனாப்பிள் எசென்ஸ்-ஒரு துளி
7. எண்ணெய் - தேவைக்கு
காஜர் டாஃபி எப்படிச் செய்வது?
மைதா மாவு, சமையல் சோடா, பைனாப்பிள் எசென்ஸ், கேரட் துருவலுடன் டால்டாவை சூடாக்கிச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இதை கால் மணி நேரம் ஊறவைக்கவும், ஊறியதும் இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, நீங்கள் விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுக்கவும். இவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். சர்க்கரையில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கெட்டிப்பாகாக காய்ச்சவும்,. பொரித்த டாஃபிகளை சர்க்கரைப் பாகில் போட்டுப் புரட்டி எடுத்து பரிமாரவும்.