பாய், மெத்தை போன்ற விரிப்புகளிலும், கட்டில் மெத்தைகளிலும் உறங்கு கிறோம், ஆனால், பாயில் தூங்குவது என்பது யோகாசனம் செய்த பயனை தரக்கூடியதாம்!
என்றாலும் பிளாஸ்டிக் பாய்கள் பயன்படுத்துவது நன்மையை அளிக்காது. காரணம், அவை அதிக சூட்டை வெளிப்படுத்தக்கூடியவை.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
1. உடலின் வளர்ச்சி சீராக அதிகரிக்கிறது.
2. ஞாபக சக்தியைப் பெருக்கும்.
3. தசை, மூட்டுகள், முதுகு சம்பந்தமான பிரச்சினைகள் குறைய உதவுகிறது.
4. ரத்த ஓட்டம் சீராவதால், உடல் இயக்கம் நன்றாக இருக்கும்.
5. கர்ப்பிணிகள் தொடர்ந்து பாயில் உறங்குவதால் அவர்களது இடுப்பு எலும்பு விரிவடைந்து, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. ஆண்கள் பாய்களில் தூங்குவதால், மார்புத் தசை விரிவடைந்து, ஆரோக்கியம் பெற உதவும்.
கோரைப்பாய், பிளாஸ்டிக் பாய் ஆகிய இரண்டு வகை பாய்கள் தவிர, பனை ஒலை, தென்னங்கீற்று நாணல், தாழை மடல் ஆகியவற்றாலும் பாய்கள்தயாரிக்கப்படுகின்றன. சில இடங்களில் பிரம்பு, ஈச்சம், பேரிச்சம், மூங்கில் போன்ற மரங்களில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
7. கம்பளிப் பாய்கள் குளிர் காலங்களில் பயன்படுத்த ஏற்றது. குளிர் ஜூத்தை நீக்கும் தன்மை கம்பளிக்கு இருக்கிறது.
8. கோரைப் பாய்கள் எல்லா காலங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றது. உடல் சூடு, மந்தம், ஜுரம் ஆகிய வற்றை போக்கும்.
9. உடலுக்கு குளிர்ச்சியும், நல்ல உறக்கத்தையும் தரும் குணம் கொண்டது
10. மூங்கில் பாய் உடல் சூட்டையும், பித்தத்தையும் அதிகரிக்கக் கூடிய தன்மை கொண்டது.
11. தாழம்பாய் உடலில் உள்ள பித்தத்தைப் போக்குவதுடன் வாந்தி, தலை குற்றல், பித்தம் ஆகியவற்றை அகற்றும் தன்மையும் பெற்றுள்ளது.