ஆனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விடுமுறை நாட்கள் மற்றும் தினசரி, வார சந்தை மற்றும் மார்க்கெட்களில் மக்கள் ஏராளமாக குவித்த வண்ணம் உள்ளனர். சரியான தனிமனித இடைவெளியையும் இவர்கள் கடைபிடிப்பது இல்லை.
இதனால், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனடிப்படையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வணிக வளாகங்கள், அங்காடிகளில் மக்கள் அதிகளவில் கூடுவதால் இந்த நடவடிக்கை.