பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பு
மாண்பு மிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ராஜீவ் காந்தி கேள் ரத்ணா விருது இனி மேஜர் தயான் சந்த் கேள் ரத்ணா விருது என்று மாற்றபட்டுள்ளது என்றார்.
யார் இந்த தயான் சந்த்?
ஹாக்கி வீரரான தயான் சந்த் 1928, 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி சார்பாக தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவர். (1)
சிறப்பாக செயல்படும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது மற்றும் தயான் சந்த் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.
1928 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது. அந்த தொடரில் 14 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த ஹாக்கி வீரர் என்ற பெருமையையும் பெற்றார் தயான் சந்த். அதுதான் இந்திய அணி ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கம் ஆகும்.
இவரது அதிகபட்ச சாதனையான 24 கோல்கள் 2003-ல் தான் முறியடிக்கப் பட்டது.
தனித்துவமான திறனை வெளிப்படுத்தி, கோல் அடிக்கும் தயான் சந்த் சிங்கை ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்றே அழைத்து வந்தனர். மேலும், 1928-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400 கோல்கள் அடித்துள்ளார்.
1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை 1-24 மற்றும் ஜப்பானை 1-11 என இந்தியா வீழ்த்தியது. அதில் தயான் சந்த் 12 கோல்கள், அவரது சகோதரர் ரூப் சிங் 13 கோல்கள் அடித்தனர். இவர்களை 'ஹாக்கி இரட்டையர்கள்’ என்று உலகம் அழைத்தது.
இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29,இந்தியாவில், தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப் படுகிறது.