சென்னை சாந்தோமில் இயங்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கிராமப்புற ஏழை இளைஞர்களை பொருளாதார ரீதியில் யாரையும் சாராதவர்களாக மாற்றும் வகையிலான தீன் தயாள் உபாத்யாயா கிராமிய கவுசல்யா யோஜனா திட்டத்தின்கீழ், எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் 05.12.2019 ஏற்பாடு செய்துள்ளது.
ஆடவர்களுக்கு மெட்டீரியல் ஹாண்ட்லிங் எக்யூப்மெண்ட் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் பணியிலும், பெண்களுக்கு இன்வென்டரி கிளார்க் பணியிலும் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் 19 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களுக்கு, ஒரகடம், ஸ்ரீசிட்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி முகாம்களில் 90 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக் காலத்தில் உணவு மற்றும் தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.
_____________Sponsored Post___________
*Instant Personal Loan*
*இடம்*: இந்தியா முழுவதும்
அனைத்து பின் கோடுகளும்
*Location* : All-Over India, All Pincodes are Eligible
*வேலை* : சுயதொழில் செய்பவர்களும் பெறலாம்!
*Employment* : Both Salaried & Self-employed can Apply
*கடன் தொகை* : 2,000₹ to 60,000₹
*Loan Amount* : 2,000 to 60,000₹
*தவணை முறை* : 15 Days to 12 months.
*Tenure* : 15 days to 365 days
*தேவையான ஆவணங்கள்* : ஆதார் அட்டை,பான் கார்டு
*Documents Required* : Adhaar & PAN Card 👉👉 http://bit.ly/2lAL0NO 👈👈
__________________________________________
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ/டிப்ளமோ (மெக்கானிக்கல்/இஇஇ/ஆட்டோமொபைல்/புரடக்ஷன்) பெற்றவர்கள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழுடன் (டி.சி) வரவேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 4 என்ற முகவரியில் இயங்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையத்துக்கு, (சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம் 3-ஆவது மாடியில்), 05.12.2019 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரில் வர வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் பதிவு மற்றும் இதர விவரங்களுக்கு 044-24615112 என்ற தொலைபேசி எண்ணிலோ, 97911 77766 என்ற மொபைல் எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் நகல்களையும் கொண்டு வர வேண்டும் என்று துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி திரு சுஜித் குமார் சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.