சிவப்பரிசிக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
1. சிவப்பரிசி - 200 கிராம்,
2. தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்,
3. கடுகு, உளுந்து, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
4. கறிவேப்பிலை - சிறிதளவு,
5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
6. எண்ணெய் - 3 டீஸ்பூன்,
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சிவப்பரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து அரைத்த சிவப்பரிசியை அதில் சேர்த்து நன்றாக ஈரப்பதம் போகும் அளவு கிளறவும். ஆறியதும் கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.