முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் - எவற்றையும் எண்ணவும் அளக்கவும் தமது உடலுறுப்புகளையே பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்ததே!
கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் / கிள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை ஆகும்.
கட்டை விரலையும் சுட்டுவிரலையும் குவித்து எடுக்கப்படும் பொருளின் அளவு - சிட்டிகை ( a pinch)
$ads={1}
- சிட்டு + கை = சிட்டிகை.
கையால் அளக்கக் கூடிய மிகச் சிறிய அளவு = சிட்டிகை.
( சிட்டு = சிறியது, சிறு குருவி.
சிட்டு > சீட்டு = ஓலை நறுக்கு.
சிட்டு > சிட்டி = சிறுகலம்) .
கைவிரல்களுக்குள் அடங்கிப் பிடித்து அள்ளினால் - அது கையளவு, கைப்பிடி.
அதே போல நீட்டலளவையில்,
ஒரு விரலின் தடிமன் = ஒரு விரற்கிடை.
நான்கு விரல்களைச் சேர்த்து நீட்டினால் சுட்டுவிரல் முதல் சுண்டுவிரல் வரை உள்ள தொலைவு நான்கு விரற்கிடை.
ஐந்து விரல்களையும் அகல விரிக்கையில் கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் = ஓர் ஒட்டை.
கட்டை விரல் முனைக்கும் சுண்டுவிரல் முனைக்கும் இடையே உள்ள தொலைவு = ஒரு சாண். (உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித உடலின் அளவு எட்டு சாண் (அவரவர் கையால்)) .
கையைச் செங்குத்தாக நிறுத்தி - நடுவிரல் நுனி முதல் முழங்கை மூட்டு வரை அளந்தால் = ஒரு முழம்.
$ads={2}
இரு கைகளையும் இயன்றவரையில் அகல விரித்தால் - இடக்கையின் நடுவிரல் நுனியிலிருந்து வலக்கை நடுவிரலின் முனைவரை உள்ள தூரம் = ஒரு பாகம்.
காலைத் தரையில் ஊன்றினால் விரல்களுக்கும் குதிகாலுக்கும் இடையில் இருக்கிற தொலைவு ஓர் அடி. (ஆங்கிலத்திலும் foot ஒரு நீட்டலளவை)
நன்றி : தமிழ் கோரா