பரங்கிக்காய் பொரியல் செய்வது எப்படி? செய்யத் தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
1. பரங்கிக்காய் கால் கிலோ,
2. வேகவைத்த வேர்க் கடலை அரை கப்,
3. வெல்லம் 1 டேபிள் ஸ்பூன்,
4. மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன்
5. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
6. உப்பு தேவைக்கு,
7. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,
8 கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,
9. எண்ணெய் 2 டீஸ்பூன்
10. மிளகாய் வற்றல் 2
11. கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை விளக்கம்
பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக) சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சுவையான பரங்கிக்காய் பொரியல் தயார்.