தேவையான பொருட்கள்
1. பலாப்பழம்
(கொட்டை நீக்கியது) - 10
2. வெல்லம் - 1/2 கிலோ
3. தேங்காய் - 2
4. அரிசி - 1 ½ ஆழாக்கு
5. ஏலப்பொடி - ஸ்பூன்
6. நெய் - 2 கரண்டி
7. குங்குமப்பூ சிறிதளவு
8. வாழை இலை - 2
9. உப்பு - ½ ஸ்பூன்,
செய்முறை
அரிசியை ஊற வைத்து, உலர்ந்ததும், ஒரு மிக்சியில் போட்டு மாவாக்கி, சலித்து, அத்துடன் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து ரொட்டிமாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து மண் தூசி இல்லாமல் வடிகட்டி வைக்கவும். பலாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தைக் காய்ச்சி பாகுபதம் வரும் சமயத்தில் தேங்காய்த் துருவல், பலாப்பழ துண்டுகள், ஏலப்பொடி, குங்குமப்பூ ஒரு கரண்டி நெய் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கி வைத்துக்கொள்ளவும். வாழை இலையை வட்ட, வட்டமாக நறுக்கி, அதில் நெய் தடவிக் கொள்ளவும். மாலை உருண்டைகளாக்கி, இலையில் பூரிக்கு தட்டுவது போல் தட்டி பூரணத்தை வைத்து மூடி, வாழை இலையோடு இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சாப்பிட சுவையாக இருக்கும். மனமும் அசத்தும்.