சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன! இதைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்! மறக்காமல் பின்பற்றவும்!
1. ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது.
2. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
3. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
4. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
5. காய்கறிகளை ரொம்பவும் போடியாக நறுக்கக் கூடாது.
6. சூடாக இருக்கும் போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
7. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.
8. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
9. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
10.தேங்காய்ட்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
11. குலாப்ஜாமுன் பொரித்தெடுக்க நெப்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
12. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.
contact form
