தேவையான பொருட்கள்
1. வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு 2 கப்,
2. கறிவேப்பிலை சிறிதளவு,
3. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
4. மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்
5. தனியா 2 டீஸ்பூன்
6. காய்ந்த மிளகாய் 4
7. உப்பு தேவையான அளவு.
செய்முறை
தனியாவுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். இந்த விழுதை உருளைக் கிழங்குடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். தீயைக் குறைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். நல்ல வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த காரப் பொரியல்.