மாம்பழ புட்டிங் செய்வது எப்படி? தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்!
தேவையான பொருள்கள்
1. பங்கனபள்ளி மாம்பழம் -1
2. முந்திரி - 10
3. பாதாம் - 4
5. நாட்டுச்சர்க்கரை - 100 கிராம்
6. பால் - 1 டம்ளர்
7. பிரஷ் க்ரீம் - 1 தேக்கரண்டி
செய்முறை
மாம்பழத்தின் தோலை சீவிவிட்டு, பாதி மாம்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள மாம்பழத்தை மிக்ஸியில் இட்டு, அத்துடன் பாதாம், சர்க்கரை சேர்த்து பால் விட்டு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கிண்ணத்தில் நறுக்கி வைத்துள்ள மாம்பழத்தைப் போட்டு அதன் மீது மிக்ஸியில் அடித்து வைத்துள்ள மாம்பழக்கலவையை ஊற்றி அதன்மீது முந்திரியைப் பொடித்து தூவவும். பின்னர் பிரஷ் க்ரீமை மேலே லேசாக பரவலாக ஊற்றி பரிமாறவும். சுவையான மாம்பழ புட்டிங் தயார். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணுவர்.