1. இட்லி மாவு - 2 கப்
2. உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) - அரை கப்
3. பெரிய வெங்காயம் - 2
4. தக்காளி - 2
5. இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
6. மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
7. மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
8. மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு
தாளிக்க
1. கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன்
2 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சாண்ட்விச் இட்லி செய்முறை
பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்,
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள்
நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள், இந்த சாண்ட்விச் இட்லியை அப்படியே சாப்பிடலாம்.