ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை காரணமாக மண்டபங்கள் வாடகைக்கு விடப்படாமல் மூடியே கிடந்தது நாடறிந்தது. அந்த ஆறு மாத காலத்திற்கு தன் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்துவரியை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த மாநகராட்சி அளித்த நோட்டீசுக்கு எதிராக ரஜினிகாந்த் தரப்பில் வழக்கு தொடர்ந்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பத்து நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன் என ரஜினிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் நேரத்தை நடிகர் ரஜினிகாந்த் தரப்பு வீணடிப்பதாக கூறி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அபராதம் விதிக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு பதில் அளித்தது. இதைத் தொடர்ந்து ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்த வழக்கை வாபஸ் பெறுவதாக நடிகர் ரஜினி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு.
மேலும் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கோரி மனுத்தாக்கல் செய்ய ரஜினி தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.