தேவையானவை
1. பால் - 2 லிட்டர்,
2. சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
3. பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன்
4. ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை
ஒரு லிட்டர் பாலை நன்றாக காய்ச்சவும். இதனுடன் எலுமிச்சைச் சாறை கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும். 10 நிமிடத்தில் பால் திரிந்து நிற்கும். அதிலிருந்து பனீரை வடிகட்டி எடுக்கவும் மீதி ஒரு லிட்டர் பாலை, பாதியாக சுண்டும் அளவு காய்ச்சவும். பனீரை உதிர்த்து பாலுடன் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இது சுண்டி அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கப், எலுமிச்சைச் சாறு துண்டுகள் போட்டு பாதாம், முந்திரி தூவி அலங்கரித்து பின் தட்டில் வைத்து பரிமாறுங்கள்.