தேவையானவை:
1. பனிர் - 200 கிராம்,
2. பால்கோவா - 100 கிராம்
3. பொடித்த சர்க்கரை - அரை கப்
4. தேங்காய் துருவல் - கால் கப்
5. ஏலக்காய்தூள் அல்லது வெனிலா எசன்ஸ் - அரை மஸ்பூன்.
தேவையான உபகரணங்கள்:
செய்முறை:
தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அடித்துக்கொள்ளுங்கள். பனிரைத் துருவிக்கொள்ளுங்கள். தேங்காய், கோவா, பனீர், சர்க்கரை, எசன்ஸ் அல்லது ஏலக்காய்தூள் கலந்து சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்திப் பிடித்து வையுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற சுவையான வித்தியாசமான ஸ்வீட் உருண்டை தயார். அழகிய தட்டில் வைத்து பரிமாறுங்கள்.
குறிப்புகள்:
எந்த உருண்டைக்குமே உப்பு வெல்லம் கூடாது. பாகு வெல்லம் எனக் கேட்டு வாங்கவேண்டும்.