ஒரு டீஸ்பூன்
தேவையான பொருட்கள்
1. பழுத்த ஆரஞ்சு - 2,
2. மிளகு சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
3. பெருங்காயத்தூள் - சிறிதளவு
4. பச்சை மிளகாய் - 2
5. எலுமிச்சை பழம் - அரை மூடி, 6. கொத்தமல்லிகறிவேப்பிலை
சிறிதளவு,
6. நெய் - ஒரு டீஸ்பூன்
7. உப்பு தேவையான அளவு
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
தேவையான உபகரணங்கள்:
1. மிக்ஸி - Mixer Grinder
2. Kadai - கடாய்
செய்முறை:
ஆரஞ்சு பழத்தை உரித்து, விதைகளை நீக்கி சுளைகளை மிக்ஸியில் போட்டு அடித்து, சக்கையை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மிளகு பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 4 டம்ளர் தண்ணீரில் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மிளகு - சீரக தண்ணீர், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கவும். இதில் ஆரஞ்சு சாறு விட்டுக் கலக்கி... எலுமிச்சையைப் பிழியவும். பிறகு கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
இந்த ரசம்... புது நிறத்தோடு, சுவையில் அசத்தும்!
புளியில்லா பத்தியம் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
சாம்பாரில் புளிப்பு அதிகமானால் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சுவைக்கு தகுந்தது போல் பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி சாம்பாரில் ஊற்றினால் சுவையாக இருக்கும்.