கருப்பு கவுனி அரிசி பாயசம் செய்யத் தேவையான பொருட்கள்
1. கருப்பு கவுனி அரிசி - 1கப்
2. பாசிப்பருப்பு - கால் கப்
3. கடலைப் பருப்பு - கால் கப்
4. வெல்லம் - இரண்டரை கப்
5. முந்திரி, திராட்சை - 50 கிராம்
6. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
புளிப்பான சாம்பாரில் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.
கருப்பு கவுனி அரிசி பாயசம் செய்முறை
கவுனி அரிசியை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்துக்கொள்ளுங்கள். பாசிப்பருப்பை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் கடலைப் பருப்பைப் போட்டு வேகவையுங்கள். இது நன்கு வெந்ததும் பாசிப்பருப்பைச் சேருங்கள். இரண்டும் இணைந்து குழைய வெந்ததும் கவுனி அரிசியைச் சேர்ந்து கிளறுங்கள். அரிசி வெந்தவுடன் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை நன்கு, கிளறுங்கள். வாசனை வந்ததும் முந்திரி, திராட்சையைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். ஆரோக்கியமான சுவையான பாயாசம் தயார்.
ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.