நடிகர் தளபதி விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு வழக்கு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு 1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்றும் அறிவுறித்தியுள்ளார்.
சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.