இக்கட்டான நிலையில் கையில் மொபைல் கூட இல்லாத நேரத்தில் ஏதோ ஒரு இடத்தில் சென்று விட்டீர்கள் திசை தெரியவில்லை என்றால் அச்சப்பட வேண்டாம்.
அங்கு ஏதேனும் ஒரு மரக் குச்சி அல்லது கம்பு இருக்குமானல் அதை அங்குள்ள தரையில் ஊன்றி நிறுத்தி விடவும்.
அதனுடைய நிழல் விழும் இடத்தில் ஒரு கல்லை வைத்து விடவும்.
$ads={1}
பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் குச்சியின் நிழல் கொஞ்சம் தள்ளி விழுந்திருக்கும். அங்கும் ஒரு கல்லை அடையாளமாக வைத்து விடவும்.
சூரியன் கிழக்கில் இருந்து மேற்கே மறைவதால், நிழலானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி விழும்.
குச்சி நடப்பட்ட முதல் நிழலின் பகுதி மேற்கு என்றும்,இரண்டாவதாக விழுந்த நிழலின் திசை கிழக்கு என்றும் அறியலாம்.
பிறகு இந்த இரு கல்லுக்கும் நேராக ஒரு கோடு கிழித்துக் கொள்ளவும்.
முதல் கல்(மேற்கு) வைக்கப்பட்ட இடத்தில் இடது காலையும், இரண்டாவது கல்(கிழக்கு) வைக்கப்பட்ட இடத்தில் வலது காலையும் வைத்து உங்கள் முகம் பார்க்கும் திசை வடக்கு என்றும், உங்கள் முதுகின் பின்புறம் தெற்கு என்றும் அறிந்து கொள்ளலாம்.