இந்தியாவில் ஆறுகளை புனிதமானதாக கருதப்படுகிறது. அதேவேளையில் ஆறுகளை அதிக அளவில் மாசு படுத்துவதும் நாம் தான்.
இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த போது, கங்கை நதியில் சடலங்கள் மிதந்து சென்ற அவலமும் இங்கே தான் அரங்கேறியது.
கங்கை முதல் தாமிரபரணி ஆறு வரை மாசுப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவில்தான் ஆசியாவிலேயே மிக சுத்தமான ஆறு ஓடுகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?
எங்கே ஓடுகிறது இந்த ஆறு?
ஷில்லாங்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் ஓடும் இந்த நதியை உம்காட் (Umngot) என்கிறார்கள்.
இந்த நதியின் கரையில்தான் ஆசியாவிலேயே மிக சுத்தமான கிராமமாக கருதப்படும் Mawlynnong அமைந்துள்ளது.
இந்த கிராமம் 100 சதவிகித கல்வியறிவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jaintia and Khasi மலைகளுக்கிடையே ஓடும் வும்காட் ( Umngot) நதி பின்னர் வங்கதேசத்துக்குள் புகுந்து பாய்கிறது.
இந்த நதியின் சிறப்புத்தன்மை என்னவென்றால் கண்ணாடி போல் மிக சுத்தமான நீரை கொண்டிருப்பதுதான்.
நதியில் படகில் பயணம் செய்தால், ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போன்ற அனுபவத்தை தரும் அளவிற்கு இந்த ஆறு சுத்தமானதாக இருக்கும். .
10 அடி ஆழத்திலுள்ள பாறைகள், ஓடும் மீன்களை கூட தெளிவாக காண முடியும்.
சுற்றுலா செல்ல உகந்த மாதம் எது?
நவம்பர் மாதம் முதல் ஏப்ரம் மாதம் வரை, இந்த நதியை பார்க்க செல்ல உகந்த சமயம் ஆகும்.