தேவையானவை
1. பேரீச்சம்பழம் - அரை கப்
2. பாதாம், முந்திரி, அக்ரூட் (மூன்றையும் வாசம் வர அரைத்து வறுத்துப் பொடியாக நறுக்கிய கலவை) : அரை கப்
3. வெனிலா எசன்ஸ் (விருப்பப்பட்டால்) - சில துளிகள்,
4. நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்
தேவையான உபகரணங்கள்
2. Serving Bowl or Serving Plates
செய்முறை
பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ரொம்ப நைஸாக அரைபட்டுவிடாமல், ஒன்றும் பாதியுமாக உடைக்கவேண்டும். பிறகு அந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி, அழுத்திப் பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். பிறந்தநாள் விழாக்களில் பிடித்து வைத்தால் விரைவில் இந்த உருண்டை காலியாகிவிடும்.