கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி? செய்முறை விளக்கம்!
தேவையான பொருட்கள் :
1. கோதுமை மாவு - 250 கிராம்,
2. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கோதுமை மாவை மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். கோதுமை மாவில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து, இடியாப்பக் குழாயில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு இடியாப்பம் ரெடி. இதற்குத் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை வைத்துப் பரிமாறினால் சுவையாக இருக்கும்.